அச்.. என
அனிச்சையாய் தும்மினாலும்
ஆ.. என
அரண்டு அலறினாலும்
நீ தான்
நினைவில் நிற்கிறாய்..
அ.. என்றால்
அன்பு,
அழகு,
அறிவு,
அரசி..
என எத்தனையோ
சொற்கள் இருந்தாலும்
அ.. என்றவுடன்
எனக்கு சட்டென
உன் பெயர்தான்
சொல்லத் தோணுகிறது..
அ..
அன்பின் முதன் மொழியாய்
அன்னையின் உயிர் மொழியாய்
அறிவின் முது மொழியாய்
ஆனால்
எனக்கு மட்டும் ஏனோ
அ..
உன்பெயரின் அடை மொழியாய்..
அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு
அகரமும் ஆதியும்
நீதான் என்பது
அந்த வள்ளுவனக்கு
ஏனோ தெரியவில்லை..
அனிச்சையாய் தும்மினாலும்
ஆ.. என
அரண்டு அலறினாலும்
நீ தான்
நினைவில் நிற்கிறாய்..
அ.. என்றால்
அன்பு,
அழகு,
அறிவு,
அரசி..
என எத்தனையோ
சொற்கள் இருந்தாலும்
அ.. என்றவுடன்
எனக்கு சட்டென
உன் பெயர்தான்
சொல்லத் தோணுகிறது..
அ..
அன்பின் முதன் மொழியாய்
அன்னையின் உயிர் மொழியாய்
அறிவின் முது மொழியாய்
ஆனால்
எனக்கு மட்டும் ஏனோ
அ..
உன்பெயரின் அடை மொழியாய்..
அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு
அகரமும் ஆதியும்
நீதான் என்பது
அந்த வள்ளுவனக்கு
ஏனோ தெரியவில்லை..
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக