அந்தி மழையில்
உன் முந்தானைகுடையில்
உன்னோடு மழைத்துளியில்
நனைந்து கொண்டே
நான் வீடு வரை
நடந்து வந்திட
நீ விடும் எனக்கு!
வானத்து வெண்ணிலா
வீதிகளை நனைக்கியில்
விண்மீன்களை எண்ணிக்கொண்டே
நாமிருவரும்
வீதிகளை கடந்து சென்றிட
நீ வேண்டும் எனக்கு!
மொட்டை மாடியில்
பௌர்ணமி நிலவொளியில்
உன் மடியில்
நான் இருக்க
உன் உள்ளங்கை சூட்டோடு
நிலாச் சோறு ஊட்டிட
நீ வேண்டும் எனக்கு!
கார் காலக்
காலைப்பொழுதில்
கம்பளியின் கைவசம்
நாம் இருக்க
உன் சுவாச சூட்டில்
குளிர் காய
நீ வேண்டும் எனக்கு!
கடல் அலைகளில்
கால்கள் நனைக்கையில்
துளியொன்று
உன் கன்னத்தில் தெறிக்க
கடல்துளி
கரிக்குமா இனிக்குமா
என அறிய
நீ வேண்டும் எனக்கு!
உன் முந்தானைகுடையில்
உன்னோடு மழைத்துளியில்
நனைந்து கொண்டே
நான் வீடு வரை
நடந்து வந்திட
நீ விடும் எனக்கு!
வானத்து வெண்ணிலா
வீதிகளை நனைக்கியில்
விண்மீன்களை எண்ணிக்கொண்டே
நாமிருவரும்
வீதிகளை கடந்து சென்றிட
நீ வேண்டும் எனக்கு!
மொட்டை மாடியில்
பௌர்ணமி நிலவொளியில்
உன் மடியில்
நான் இருக்க
உன் உள்ளங்கை சூட்டோடு
நிலாச் சோறு ஊட்டிட
நீ வேண்டும் எனக்கு!
கார் காலக்
காலைப்பொழுதில்
கம்பளியின் கைவசம்
நாம் இருக்க
உன் சுவாச சூட்டில்
குளிர் காய
நீ வேண்டும் எனக்கு!
கடல் அலைகளில்
கால்கள் நனைக்கையில்
துளியொன்று
உன் கன்னத்தில் தெறிக்க
கடல்துளி
கரிக்குமா இனிக்குமா
என அறிய
நீ வேண்டும் எனக்கு!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக