சல்லிக்கட்டு

தேரேறி
இளங்கன்று
ஒன்று
இறந்துபோக

மணியடித்து
அதன் தாய்ப்பசு
மனுப்போட்டதாம்
அரசனிடம்

தவறி
தேரேற்றி
கொன்றது

தன்
மகனே
ஆனாலும்

யானைக்
காலிடறி

அவன்
தலையுருள
கட்டளையிட்ட

மனுநீதி சோழன்
அரசாண்ட
நாடல்லவா இது..

நீதிமன்ற
வளாகத்திலுள்ள
அவனது சிலையும்
சிரித்தது

காளைகள்
சல்லிக்கட்டில்
காயப்படுமென

ஊளையிட்ட

நீதிமன்ற
தீர்ப்பைக் கேட்டு..

அதை இன்னும்
ஊதுகின்ற

ஆட்சியாளர்களின்
ஆட்சியைப் பார்த்து..





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக