கடைசித் துளியாய்..

வானில் தீட்டிய நீலம் நீ
பூவில் வீசும் வாசம் நீ

இரவில் பால் நிலவாய் நீ

பகலில் பாதைக்காட்டும் பகலவனாய் நீ

பாலையில் விழுந்த மழைத்துளி நீ

கோடையில் அந்தி மழை நீ

சுட்டாலும் சுருங்காது சொந்தம் நீ

பிரிந்தாலும் பிரியாத பந்தம் நீ

உறவுக்கும் பிரிவுக்கும் இடையில் நீ

ஈரேழு பிறவியின் பயனாய் நீ

நீ கிடைத்தது 

கனவா நனவா
என தோணவில்லை

கலையும் கனவானாலும்

கரையும் உயிரின்
கடைசித் துளியாய்
நீ மட்டும்..





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக