செல்லாத நோட்டு

ஒத்த சொல்லால சொல்லிப்புட்ட
ஒட்டு துணியோட ஓடவிட்ட

ஒரே ராத்திரியில

செல்லாம போனது
எங்க ரூபா
நோட்டு மட்டுமல்ல

உங்க மேல இருந்த

நம்பிக்கையும்
நம்பிக்கையில்லா
வங்கியும் தானய்யா..

டீ-கடை காரன்னு சொன்னான்


ஊரு நிலவரமும்

உலக அரசியலும்
உனக்கு தெரியும்னு
ஓட்டு போட்டோம்

ஏழை

படும் பாடு
புரியும்னு
ஓட்டு போட்டோம்..

இப்போ

செல்லாம போனது

எங்க ரூபா 

நோட்டும் மட்டும் 
இல்லையா

எங்களோட நம்பிக்கையும்

உங்களோட புதுநோட்டும்
தானய்யா..




ஓட்டுக்கு மையிட்டு

உரிமையை பறித்தாய்
நோட்டுக்கு மையிட்டு
உடமையை பறிப்பதேனோ!

கருப்பு பணமும்

கள்ளப்பணமும்
வந்து சேரும்னு
மோடி வைப்பதேனோ!

இல்லையென்று

கேட்டிருந்தால்
இட்டிருப்போமே
ஏசகமாய்..





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக