கன்னத்தில் முத்தமிட்டால்..

உன் கூந்தலில் இருந்து
உதிர்ந்த பூ

உன் நுனிப்பல் பட்டு

நுனி அறுந்துபோன இலை

நீ பிரித்து வீசிய

சாக்லேட் கவர்

நீ கிழித்தெறிந்த

எனது கவிதை

உடைந்து போன

வளையல் துண்டுகள்

வளைந்து போன

கொண்டை ஊசி

என எத்தனையோ..


உனக்கு தெரியாது

சேர்த்து வைத்ததை

கையில் 
எடுத்து பார்த்து ரசித்தாலும்

நீயாய் கொடுத்த 

முத்தத்தை மட்டும்

ஈரம் காய்ந்த 
கன்னத்தை

கண்ணாடியில் பார்த்தே
ரசிக்கிறேன்..







கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக