அத்தனை அழகா!

நான் என்ன
அத்தனை அழகா!

கண் கொட்டாமல்

என்னையே பார்க்கிறாயே!

உனக்கு

அலுக்கவில்லையா!?

காலையும் மாலையும்

கண்ணாடியில்
தோணும்

உன்

பிம்பத்தையே

நீ

பிரமிப்போடு
பார்க்கும் போது

அசலைப் பார்க்கும்

எனக்கு
அலுப்பு இல்லை
அன்பே...!



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக